திரு ஹரன் பிரசன்னா எழுதியிருந்த ஒரு கட்டுரையை தமிழ் பேப்பரில் காலையில் படித்தேன். உடனே அதற்கு
மறுமொழியாக, இது வருந்தத் தக்க நிலை என்று எழுதியிருந்தேன். இது நடந்தது இன்றுகாலை ஏழே முக்கால்
மணியளவில். இப்போதும் அதேநேரம்தான். இதற்குள்ளாக, அந்தக் கட்டுரைக்குப் பல பின்னூட்டங்கள்
விழுந்துவிட்டன. நான் என்னுடைய எண்ணங்களைத் தெளிவாகச்
சொல்லவேண்டும் என்று விரும்பினேன். சொன்னேன். அது, இதோ இங்கே. (ஹபி ஒப்புதல் கொடுத்தால், அங்கும் வெளிவரும்)
Tamil Nadu has always been very loud in taste; in Music,
Celebrations – and of course, in Politics.
தமிழ்க் கலாச்சாரம் என்று
தவறாகச் சொல்லப்படும் பெரும்பாலான நிகழ்வுகள் அருவருப்பூட்டக்கூடிய அளவிற்கு
ஆரவாரமானது. இது திராவிடக் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிய காலம்தொட்டு
ஆரம்பித்தது. 1950-60களில் ஆரம்பித்தது.
- கேவலமான அடைமொழிகளும் (அண்டங்காக்கை, வந்தேறிகள், குல்லுகப் பட்டர்…)
- கீழ்த்தரமான, நாக்கூசும் பொதுமேடைப் பேச்சுக்களும் (xxxxx ஒன்றும் படிதாண்டா பத்தினியும் அல்ல; நானும் முற்றும் துறந்த முனிவனுமல்ல..)
- பதிலுக்குத் தாக்காதவர்கள் மீது மட்டுமே இனத்தாக்குதல்களும் வசவுகளும் (பாம்பையும் xxxxயும் கண்டால்…)
- திசைத்திருப்பும் வசைகளும், (தெற்கு தேய்கிறது, வடக்கு..) வெற்று வாக்குறுதிகளும்(அடைந்தால்..)
- மக்களின் பணத்தை சொந்த லாபத்திற்காக பெரிய அளவில் சுரண்டுவதும் (சர்க்காரியா கமிஷன்)
இப்படி
ஆரம்பித்த அவலட்சணம்தான் இன்று, சினிமாவையும் ஆட்சியையும்
பின்னிப்பிணைத்தது.
வடிவேலு
எப்படி உரைகல் ஆகிறார்? சினிமா தந்த பிரபலமும், பணமும் ஆரவாரமாக, அரசியலாக வெளிப்பட்டதில்
அப்படி ஆகிறார்.
வடிவேலு
இப்போது வேலையில்லாமல் சும்மாயிருந்தால் தப்பில்லை. ஒன்றுமில்லாமல் வந்தவர்தான்.
இன்னும் பணம் வைத்திருக்கிறார்.
அதனால்
நாம் வருத்தப் படவேண்டியது வடிவேலுவுக்கல்ல; தமிழகத்தின் நிலைக்காக, நம் வருங்கால சந்ததிகளின் எதிர்காலத்திற்காக.
இதைத்தான்
என் முதல் பதிவில் சொல்லியிருந்தேன்.
Agreed
ReplyDelete