20 வயது மகள் பிடித்தவனோடு வாழுவதற்காக வீட்டைவீட்டு
வெளியேறிவிட்டாள். அவள் தேர்ந்தெடுத்தது 22 வயது நிரம்பிய தீபக். ஆக, சட்டத்தின் முன்னால், இருவரும் தாங்களாகவே ‘முடிவெடுக்கும்’ வயதில் இருப்பவர்கள்தான். இப்போது அநேகமாக, தெருவுக்கு இரண்டு
வீடுகளிலாவது இத்தகைய நிகழ்ச்சி நடப்பது பழகிவிட்டது.
ஆனால், நான் சொல்லப் போவது, யாராலும் சகித்துக்கொள்ள முடியாதது.
அந்தப் பெண்ணின் தகப்பன், “பையனும், பெண்ணும் எங்கே” என்று கேட்டதற்கு, தீபக்கின் வீட்டில் “தெரியாது” என்று சொல்லியிருக்கிறாகள். பதிலை ‘வரவழைப்பதற்காக’, அந்த ஆள், தீபக்கின் அம்மா லீலாவையும், லீலாவின் சகோதரியையும் கடத்திக்கொண்டு போய், ஒரு இடத்தில் அடைத்துவைத்து....
இருவரையும் கற்பழித்திருக்கிறான். பிறகு, லீலாவிடம், “நீ போய் என் மகளை இங்கே கொண்டு வா. அப்போதுதான்
உன் சகோதரி இங்கிருந்து வெளியே போக முடியும்” என்று சொல்லி அவரை வெளியே அனுப்பியிருக்கிறான். அவர் போலீசிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
கடத்துவதற்கு, அந்த ஆளின் மனைவியும் உதவி இருக்கிறார்.
******************
சிவானந்தனுக்கு இப்போது 19 வயது. அவனுடன்
+2 படித்த பெண் சென்னை பல்லாவரத்தில், ஒரு ஷோரூமில் விற்பனையாளராக பணி செய்து வருகிறார். ஐந்து நாட்களுக்கு முன், சிவானந்தன், தன்னுடைய நண்பன் அரவிந்த் சந்தோஷுக்கு அடிபட்டு இருப்பதாகவும், அதனால் உதவி வேண்டும் என்றும்
ஷோரூமில் இருந்த இந்தப் பெண்ணிடம் போய் சொல்லி இருக்கிறான். அவ்ளும் சம்மதிக்கவே, இரண்டுபேருமாக பொழிச்சலூரில் இருக்கும்
அரவிந்த் சந்தோஷ் வீட்டிற்குப் போயிருக்கிறார்கள்.
அரவிந்தின் தந்தை ஒரு மருத்துவர். கிளினிக்
நடத்திவருகிறார். சம்பவ தினத்தன்று, மருத்துவரும் அவருடைய
மனைவியும் வீட்டில் இல்லை.
வெளியூர் போயிருக்கிறார்கள். இவர்கள் போனபோது, அரவிந்தன் இன்னும்
3 பேருடன் ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டிருந்தான். விபத்து, காயம் எதுவும் கிடையாது.
ஏன் அழைத்துவந்தாய் என்று விளக்கம் கேட்ட
பெண்ணிற்கு, சிவானந்தன் சமாதானப் படுத்திப் பேசி, மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தைக் குடிக்கவைத்து, பிறகு அந்த ஐந்து பெரும் அவளை ....
வெகுநேரமாகியும் வீடு திரும்பாதலால், அந்தப் பெண்ணின் தாய், காவல்நிலையத்தில் முறையிட்டிருக்கிறார். அந்த ஐவரில் நான்கு பேரை
கைது செய்தாகிவிட்டது.
அரவிந்தும் மற்றும் மூவரும் பொறியியல் படிக்கும் மாணவர்கள்.
******************
நேற்றைக்கு, சென்னை அரண்மனைக்காரத் தெருவில் இருக்கும் ஒரு பள்ளி ஆசிரியை, அங்கு படிக்கும் ஒரு மாணவனால் வகுப்பறையிலேயே குத்திக் கொல்லப் பட்டிருக்கிறார்.
******************
I have read somewhere that, “Parents, Work-Place/ School & the Society make the character
in a person”.
பெற்றோர், கல்விகற்பிக்கும் இடம் (அல்லது பணியிடம்), பழகும் மனிதர்கள் ஆகிய மூன்றும் சேர்ந்துதான் ஒரு நபரின் குணாதிசயங்களை உருவாக்குகின்றன.
******************
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடவும்: Kindly share your thoughts here: