Thursday, February 2, 2012

தமிழக சட்டசபையும், வெளியேற்றப்பட்ட நாகரிகமும்.


பலரைபோலவே, திமுக அகற்றப்படவேண்டும் என்று நானும் விரும்பினேன். தேமுதிக வேட்பாளர் எங்கள் தொகுதியில் நிறுத்தப்பட்டதால் அவருக்கு வாக்களித்தேன்.  ஜெயலலிதா நல்லாட்சி தருவார் என்று நம்பினேன். நேற்றைய நிகழ்வுகளைப் பாக்கும்போது, மிகவும் அலுப்பாக இருக்கிறது.

இந்த சுட்டியில் இருக்கும் படத்தில், முக்கியமாக 3:05 முதல் கவனித்தால், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சபாநாயகருக்குக் கட்டுப்பட்டு, அமைச்சர் பேச வழிவிட்டு உட்கார்ந்தாலும், அதிமுகவால் தூண்டப்பட்டு மீண்டும் எழுவதையும், 'இது சினிமா அல்ல' என்று அதிமுக உறுப்பினர்கள் ஏளனமாக  கத்துவதையும் காண முடிகிறது.

மாண்புமிகு முதலமைச்சரின் பேச்சிலும் முகபாவத்திலும் மாண்பற்ற ஆவேசமும் ஆணவமும்தான் வெளிப்படுகின்றன.

தமிழக அரசியலும், பொறுப்புணர்வும் வெவ்வேறு துருவங்கள்.



நன்றி: தமிழன் டிவி கிளிப், youtube.
http://www.youtube.com/watch?v=xdIebtxOtzs&feature=player_embedded#!


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடவும்: Kindly share your thoughts here: