Saturday, February 16, 2013

விஸ்வரூபம் - My Review


ரொம்ப காலத்திற்குப்பின் நேற்று, படம் பார்க்கப்போனேன். மகன் ஏற்பாடு.  மனைவியுடன் போயிருந்தேன்.  இரவு காட்சி என்பதால், வீட்டின் அருகில் இருக்கும் திரையரங்கு.

  1. I went with tickets booked online.  
  2. I got email and sms with secret codes etc, 
  3. I was further scare by demanding personal id is must etc.. They gave a list of ids, which would be acceptable to the Box Office.  
  4. I double checked that I had with me my driving licence, Pan card etc.  Still a naaging doubt within me was that in both cards, my photos did not look like my face. 
  5. But the process at box office was simple. (or S***id?).  The box office guy checked in his own monitor and issued my 2 tkts. 
  6. Frisking - to prevent own food/ eatables... - is irritating.  Humiliating.
  7. I did not feel small, for not buying PopCorns/ Coffee  Cool drinks, that I didn't want.  Possibly, if the frisking humiliation was not there, I might have had at least a coffee   
  8. Parking system was neat. I could get out fast - parking fee 30/=
  9. மற்ற கலர்ஃபுல் விஷயங்கள்: கீழே உள்ளன.


One+ve:  
Saw it was Houseful (almost. Just some 10-15 seats vacant). Counter sales was also there.

One -ve:  
Against 235/- collected online, the tkts they gave me was for 180/-  No idea why they collected 50/- extra.  Did not check at sales counter how much they collect in cash for the same class.

One Clarification:
About the film Viswaroopam?  எங்கேய்யா விமர்சனம் என்று திட்டாதீர்கள்.  

சினிமா அட்டகாசமான தயாரிப்பு என்பதால், என் விமர்சனத்தை, ஒரு 'படமாக' இங்கே வைத்திருக்கிறேன்.  அதில் இருப்பவை, அதனதன் ஆகிருதியுடனும், காலியிடங்களுடனும், என் விமர்சனம்.

விளக்கம் போதாவிட்டால், தயங்காமல் கேளுங்கள்.  :)

Monday, February 20, 2012

"வடிவேலு – திராவிட அரசியலின் உரைகல்" என்பது சரியா?



திரு ஹரன் பிரசன்னா எழுதியிருந்த ஒரு கட்டுரையை தமிழ் பேப்பரில் காலையில் படித்தேன். உடனே அதற்கு மறுமொழியாக, இது வருந்தத் தக்க நிலை என்று எழுதியிருந்தேன்.   இது நடந்தது இன்றுகாலை ஏழே முக்கால் மணியளவில். இப்போதும் அதேநேரம்தான். இதற்குள்ளாக, அந்தக் கட்டுரைக்குப் பல பின்னூட்டங்கள் விழுந்துவிட்டன.  நான் என்னுடைய எண்ணங்களைத் தெளிவாகச் சொல்லவேண்டும் என்று விரும்பினேன். சொன்னேன். அது, இதோ இங்கே. (ஹபி ஒப்புதல் கொடுத்தால், அங்கும் வெளிவரும்) 

Tamil Nadu has always been very loud in taste; in Music, Celebrations – and of course, in Politics. 
தமிழ்க் கலாச்சாரம் என்று தவறாகச் சொல்லப்படும் பெரும்பாலான நிகழ்வுகள் அருவருப்பூட்டக்கூடிய அளவிற்கு ஆரவாரமானது. இது திராவிடக் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிய காலம்தொட்டு ஆரம்பித்தது. 1950-60களில் ஆரம்பித்தது.
  1. கேவலமான அடைமொழிகளும் (அண்டங்காக்கை, வந்தேறிகள், குல்லுகப் பட்டர்…)  
  2. கீழ்த்தரமான, நாக்கூசும் பொதுமேடைப் பேச்சுக்களும் (xxxxx ஒன்றும் படிதாண்டா பத்தினியும் அல்ல; நானும் முற்றும் துறந்த முனிவனுமல்ல..)  
  3. பதிலுக்குத் தாக்காதவர்கள் மீது மட்டுமே இனத்தாக்குதல்களும் வசவுகளும் (பாம்பையும் xxxxயும் கண்டால்…) 
  4. திசைத்திருப்பும் வசைகளும், (தெற்கு தேய்கிறது, வடக்கு..) வெற்று வாக்குறுதிகளும்(அடைந்தால்..)  
  5. மக்களின் பணத்தை சொந்த லாபத்திற்காக பெரிய அளவில் சுரண்டுவதும் (சர்க்காரியா கமிஷன்)
இப்படி ஆரம்பித்த அவலட்சணம்தான் இன்று, சினிமாவையும் ஆட்சியையும் பின்னிப்பிணைத்தது.
வடிவேலு எப்படி உரைகல் ஆகிறார்? சினிமா தந்த பிரபலமும், பணமும் ஆரவாரமாக, அரசியலாக வெளிப்பட்டதில் அப்படி ஆகிறார்.
வடிவேலு இப்போது வேலையில்லாமல் சும்மாயிருந்தால் தப்பில்லை. ஒன்றுமில்லாமல் வந்தவர்தான். இன்னும் பணம் வைத்திருக்கிறார்.
அதனால் நாம் வருத்தப் படவேண்டியது வடிவேலுவுக்கல்ல; தமிழகத்தின் நிலைக்காக, நம் வருங்கால சந்ததிகளின் எதிர்காலத்திற்காக.
இதைத்தான் என் முதல் பதிவில் சொல்லியிருந்தேன்.



Friday, February 10, 2012

நெஞ்சு பொறுக்குதில்லையே...


20 வயது மகள் பிடித்தவனோடு வாழுவதற்காக வீட்டைவீட்டு வெளியேறிவிட்டாள். அவள் தேர்ந்தெடுத்தது 22 வயது நிரம்பிய தீபக். ஆக, சட்டத்தின் முன்னால், இருவரும் தாங்களாகவே முடிவெடுக்கும் வயதில் இருப்பவர்கள்தான். இப்போது அநேகமாக, தெருவுக்கு இரண்டு வீடுகளிலாவது இத்தகைய நிகழ்ச்சி நடப்பது பழகிவிட்டது. 

ஆனால், நான் சொல்லப் போவது, யாராலும் சகித்துக்கொள்ள முடியாதது.

அந்தப் பெண்ணின் தகப்பன், “பையனும், பெண்ணும் எங்கே என்று கேட்டதற்கு, தீபக்கின் வீட்டில் “தெரியாது என்று சொல்லியிருக்கிறாகள். பதிலை வரவழைப்பதற்காக’, அந்த ஆள், தீபக்கின் அம்மா லீலாவையும், லீலாவின் சகோதரியையும் கடத்திக்கொண்டு போய், ஒரு இடத்தில் அடைத்துவைத்து.... இருவரையும் கற்பழித்திருக்கிறான். பிறகு, லீலாவிடம், “நீ போய் என் மகளை இங்கே கொண்டு வா. அப்போதுதான் உன் சகோதரி இங்கிருந்து வெளியே போக முடியும்என்று சொல்லி அவரை வெளியே அனுப்பியிருக்கிறான்.  அவர் போலீசிடம் புகார் கொடுத்திருக்கிறார். கடத்துவதற்கு, அந்த ஆளின் மனைவியும் உதவி இருக்கிறார்.

******************

சிவானந்தனுக்கு இப்போது 19 வயது. அவனுடன் +2 படித்த பெண் சென்னை பல்லாவரத்தில், ஒரு ஷோரூமில் விற்பனையாளராக பணி செய்து வருகிறார். ஐந்து நாட்களுக்கு முன், சிவானந்தன், தன்னுடைய நண்பன் அரவிந்த் சந்தோஷுக்கு அடிபட்டு இருப்பதாகவும், அதனால் உதவி வேண்டும் என்றும் ஷோரூமில் இருந்த இந்தப் பெண்ணிடம் போய் சொல்லி இருக்கிறான். அவ்ளும் சம்மதிக்கவே, இரண்டுபேருமாக பொழிச்சலூரில் இருக்கும் அரவிந்த் சந்தோஷ் வீட்டிற்குப் போயிருக்கிறார்கள்.
அரவிந்தின் தந்தை ஒரு மருத்துவர். கிளினிக் நடத்திவருகிறார். சம்பவ தினத்தன்று, மருத்துவரும் அவருடைய மனைவியும் வீட்டில் இல்லை. வெளியூர் போயிருக்கிறார்கள். இவர்கள் போனபோது, அரவிந்தன் இன்னும் 3 பேருடன் ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டிருந்தான். விபத்து, காயம் எதுவும் கிடையாது.

ஏன் அழைத்துவந்தாய் என்று விளக்கம் கேட்ட பெண்ணிற்கு, சிவானந்தன் சமாதானப் படுத்திப் பேசி, மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தைக் குடிக்கவைத்து, பிறகு அந்த ஐந்து பெரும் அவளை ....  

வெகுநேரமாகியும் வீடு திரும்பாதலால், அந்தப் பெண்ணின் தாய், காவல்நிலையத்தில் முறையிட்டிருக்கிறார். அந்த ஐவரில் நான்கு பேரை கைது செய்தாகிவிட்டது.

அரவிந்தும் மற்றும் மூவரும் பொறியியல் படிக்கும் மாணவர்கள்.

******************

நேற்றைக்கு, சென்னை அரண்மனைக்காரத் தெருவில் இருக்கும் ஒரு பள்ளி ஆசிரியை, அங்கு படிக்கும் ஒரு மாணவனால் வகுப்பறையிலேயே குத்திக் கொல்லப் பட்டிருக்கிறார்.

******************

I have read somewhere that, “Parents, Work-Place/ School & the Society make the character in a person”. 

பெற்றோர், கல்விகற்பிக்கும் இடம் (அல்லது ணியிடம்), பழகும் மனிதர்கள் ஆகிய  மூன்றும் சேர்ந்துதான் ஒரு நபரின் குணாதிசங்களை உருவாக்குகின்றன.

******************


1.      http://bit.ly/wQ0rE3


Friday, February 3, 2012

சில்லறை வர்த்தகம்: பொம்மை - என்.சொக்கன் எழுதிய சிறுகதை




கட்டுரை டாட் காமில் சில்லறை வர்த்தகம் பற்றி எழுதி வருகிறேன். அதில் ஆன்லைன் வர்த்தகம் பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று குறித்து வைத்திருக்கிறேன். அதற்கிடையே இந்தச் சிறிய அறிவிப்பு. 

இந்தவார (போனவார...?) ஆனந்த விகடனில் (1-2-12), பொம்மை என்று ஒரு சிறுகதை வந்திருக்கிறது. நண்பர் @nchokkan எழுதியது. எனக்குப் பிடித்திருந்தது. அதனால்தான் இந்தப் பதிவு. படங்கள் சுமாராக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். என்னுடைய அலைபேசியின் சுமாரான கேமராவில் எடுக்கப்பட்டவை இவை.  

இந்தக் கதையைப் பற்றி டிவிட்டரில் சுவாரஸ்யமான விவாதம் நடந்துவருகிறது. அது இன்றும் தொடருவதால், இந்தப் பதிவு.  :) 





















நன்றி:  , திரு. என்.சொக்கன். 

Thursday, February 2, 2012

தமிழக சட்டசபையும், வெளியேற்றப்பட்ட நாகரிகமும்.


பலரைபோலவே, திமுக அகற்றப்படவேண்டும் என்று நானும் விரும்பினேன். தேமுதிக வேட்பாளர் எங்கள் தொகுதியில் நிறுத்தப்பட்டதால் அவருக்கு வாக்களித்தேன்.  ஜெயலலிதா நல்லாட்சி தருவார் என்று நம்பினேன். நேற்றைய நிகழ்வுகளைப் பாக்கும்போது, மிகவும் அலுப்பாக இருக்கிறது.

இந்த சுட்டியில் இருக்கும் படத்தில், முக்கியமாக 3:05 முதல் கவனித்தால், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சபாநாயகருக்குக் கட்டுப்பட்டு, அமைச்சர் பேச வழிவிட்டு உட்கார்ந்தாலும், அதிமுகவால் தூண்டப்பட்டு மீண்டும் எழுவதையும், 'இது சினிமா அல்ல' என்று அதிமுக உறுப்பினர்கள் ஏளனமாக  கத்துவதையும் காண முடிகிறது.

மாண்புமிகு முதலமைச்சரின் பேச்சிலும் முகபாவத்திலும் மாண்பற்ற ஆவேசமும் ஆணவமும்தான் வெளிப்படுகின்றன.

தமிழக அரசியலும், பொறுப்புணர்வும் வெவ்வேறு துருவங்கள்.



நன்றி: தமிழன் டிவி கிளிப், youtube.
http://www.youtube.com/watch?v=xdIebtxOtzs&feature=player_embedded#!


Wednesday, February 1, 2012

Thus, I became a writer...

On 28th Jan 2012, my friend N.Chokkan and I had a very long discussion. Chokkan is a renowned writer, besides being a very senior level executive in a Software company.  The call was triggered by the fact that he was to write a review of my first book in Tamil, விலங்குப் பண்ணை, translated from the original, Animal Farm by George Orwell. The discussion covered several subjects of mutual interests. He advised to me to write my own blog and post reviews and other interesting facts about the new book.  I was feeling on top of the world and the generous praises he showered on my work. His review is here


I sincerely feel, the credit must go to Kizakku Pathippagam and specifically to Badri, who continues to be a source of inspiration to me.  He also wrote a good introduction to my book, prior to its launch during the Chennai Book fair 2012..

That resulted in this first post by me.  I had signed up to be a blogger - forgot when, and am now using that 4 or 5 year old action. 




******************

I had written few notes under the common banner "Sri Gurubhyo Namah" in facebook, during Sep 2011. It was my way of saying thanks to some of my great teachers.  I will post them here, of course.  :)  

I must also post about my experience of becoming a first time writer. The reviews etc. And some pictures too.  

I will also be writing on Retailing.  It appears in 'கட்டுரை டாட் காம்as a series.  I may make some modifications and post them here. I thank மாயவரத்தான் for his trust in me. 

******************


I am new to writing blog. Please expect me to make horrendous mistakes. I can assure you that I won't repeat any mistake; but certainly will invent newer ones!  ;)


I am starving for encouragement. Therefore I seek your assistance. Please share your thoughts here in the comments box.
-----------
pvr